பிந்திய செய்திகள்

சுற்றுலா பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து!

இன்று (24) காலை திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகல் மற்றும் நாரம்பல பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும், ஒரு சிறுவனுமே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலையிலிருந்து திருகோணமலை சேருவில விகாரையை பார்வையிட்டு குருணாகலுக்கு திரும்பும் போதே பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts