பிந்திய செய்திகள்

இது ஆரம்பம் மாத்திரமே – எச்சரித்த சாணக்கியன்!

இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் அரச தலைவரின் வீட்டினையும் முற்றுகையிட்டு முடக்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Gallery

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சி.வி விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Gallery

இதன் போதே போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

Gallery

நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியினை சொல்லிருந்தேன். அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் அரச தலைவரின் செயலகத்தினையோ அல்லது வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன்.

அதேபோன்று இன்று அரச தலைவரின் செயலகத்தை முற்றுகையிட்டு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது, ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர்.

தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts