பிந்திய செய்திகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் பலர் கைது!

நேற்று இரவு புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோத கசிப்பு மற்றும் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்றவர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மன்னாகண்டல் பகுதியில் அகழ்வில் ஈடுபட்ட மூவரும் அவர்களின் வாகனங்களும் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அனுமதியற்ற முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும் அதன் சாரதியும், கனரக இயந்திரம் ஒன்றும் அதன் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான அனுமதிப்பத்திரம் பயன்படுத்தி மணல் ஏற்றி சென்ற 4 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மேற்கொள்ளப்பட்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் ஆற்றுப்பகுதியில் சட்விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நிலையம் ஒன்றும் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 80 லீற்றர் கசிப்பும் 859 லீற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களும் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் மீதான சான்றுப்பொருட்கள் எதிர்வரும் 28.02.2022 திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts