பிந்திய செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரின் மனைவி பெயரில்30 கோடிக்கு மேல் சொத்து

அண்மைய காலமாக ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரின் சொத்துக்கள் சம்பந்தமாக நடத்திய மிகப் பெரிய சுற்றிவளைப்பை இன்று காலை மேற்கொண்டுள்ளபோது தெமட்டகொட வசந்த என்ற இந்த போதைப் பொருள் விற்பனையாளரின் மனைவியின் பெயரில் இருந்த இந்த சொத்துக்களின் பெறுமதி சுமார் 32 கோடி ரூபாய் என தெரியவருகிறது.

நீர்கொழும்பு பிடிபன கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ள 100 பேர்ச்சஸ் காணி அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹொட்டல் என்பனவும் இந்த சொத்துக்களில் அடங்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் காவலாளியின் பாதுகாப்பின் கீழ் இந்த ஹொட்டல் அமைந்துள்ளது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் போது நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பதற்காக அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், காவல்துறை மோப்ப நாய்களின் உதவியுடன் ஹொட்டல் அமைந்துள்ள வளவில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினர் ஏற்கனவே தெமட்டகொட வசந்தவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கார்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts