உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் இலங்கையில் அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.
உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையால், அங்குள்ள மக்களை தொலைபேசி அல்லது ஒன்லைன் மூலம் தொடர்புகொள்வது மிகவும் கடினம்.
இந்த நாட்களில் இலங்கை, உக்ரைன் உட்பட ரஷ்ய பிராந்தியத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
துருக்கியில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக உக்ரைனில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
மேலும், இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் உக்ரைனும் ரஷ்யாவும் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.