பிந்திய செய்திகள்

தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலம் மீட்பு!

இன்று மதியம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முற்பகல் குறித்த பகுதிக்கு தொழிலுக்குச் சென்றவர்களால் புலியின் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறித்த புலியின் சடலம் ரந்தெனிகலவில் உள்ள வனவிலங்கு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலத்தில் காயங்கள் இருப்பதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts