அஞ்சனா பிரியஞ்சித் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் செலவு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகரிப்பதால் போக்குவரத்து துறை ஊழியர்களின் வருவாயை நேரடியாக பாதிக்கும் என அதன் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஜூலை மாதம் வரை பேருந்து கட்டணத்தை மாற்றியமைப்பதாக தாங்கள் ஒருபோதும் அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளிக்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எனவே இதற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், திங்கட்கிழமைக்குள் பொது போக்குவரத்து துறை ஸ்தம்பிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.