பிந்திய செய்திகள்

நிறுத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம்

இன்றையதினம்யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த விடையத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று பிற்பகல் ஆளுநர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இன்று காலை ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் ஒருவருடன் அரசியல் கைதிகளின் உறவினர்களும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைவாக இன்று காலை சிறைச்சாலைக்கு சென்ற அரசியல் கைதிகளின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts