பிந்திய செய்திகள்

விசா காலத்தை நீடிக்க தீர்மானம்- சுற்றுலாத்துறை அமைச்சு

உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் சுமார் 4,000 பேர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், உக்ரைனியர்களின் சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில் காலாவதியாகி விடுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விசாவை நீடிக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts