பிந்திய செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் 600 வகையான பொருட்களுக்கு வரி உயர்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆடம்பரப் பொருட்களின் முழுமையான பட்டியலை முன்வைத்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை தற்போது, ஓரளவிற்கு அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி ஆளுநரின் பட்டியலில் உள்ளடங்காத அத்தியாவசியமற்ற வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும் இலங்கை மத்திய வங்கி தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts