பிந்திய செய்திகள்

முல்லையில் நீர்பாதுகாப்பு பயிற்சி பட்டறை !

22.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்நிலைகளால் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்கும் இளைஞர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்பு ஒன்று நாயாறு கடற்படை தளத்தில் இன்று தொடர்ங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சர்வோதய நிறுவனமும் இணைந்து USAID நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் யுவதிகளுக்கான நீர்நிலை பாதுகாப்பு பயிற்சி பட்டறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இரண்டுநாள் பயிற்சி பட்டறை தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 30 இளைஞர்யுவதிகளும், கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த 30 இளைஞர்யுவதிகளும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர் யுவதிளும் என 65 இளைஞர் யுவதிகளுக்கான நீர்நிலை பாதுகாப்பு பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தங்களில் பாதிப்புக்குள்ளான மக்களை மீட்டெடுத்து முதலுதவி சிகிச்சையளிப்பதும் நேக்கமாக கொண்டது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன் இலங்கையின் நீர்நிலை பாதுகாப்பு நிலையத்தின் அனுசரணையுடனும் நாயாறு கடற்படை தளத்தில் தொங்கிவைக்கப்பட்டுள்ளது.நாளையும் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றுள்ளது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts