பிந்திய செய்திகள்

ஐப்பானிடம்-இலங்கை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய கிகா மின்சாரம் வாகனம் பேட்டரி தொழிற்சாலையை இலங்கையில் அமைக்க பரிசீலிக்குமாறு ஜப்பானுக்கான கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தினால் 80க்கும் மேற்பட்ட வருங்கால ஜப்பானிய நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இணையத்தள வலையமைப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் கிடைக்கும் உயர்தர கிராஃபைட், அதில் 30 சதவீதம் மின்சாரம் வாகன பேட்டரிகளுக்கான மூலப்பொருளாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

இணையத்தள வலையமைப்பின் போது, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், சஞ்சீவ் குணசேகர தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு வாய்ப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பம் ஆகியவற்றை வலியுறுத்தி, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு ஒருங்கிணைப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts