பிந்திய செய்திகள்

தந்தை -மகன் இடையே தனிப்பட்ட தகராறு உயிரிழந்த தந்தை

படதொட்ட பிரதேசத்தில் நேற்றைய தினம் (27) தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தை ஒருவரை அவரது மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் படத்தோட்ட – குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குப்பை கூழமொன்றிக்குள் தவறி விழுந்ததன் காரணமாக இந்நபர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மரணம் சந்தேகத்திற்குரியதென உயிரிழந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.

அதற்கமைய, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது மகனினால் தாக்கப்பட்டதாலேயே குறித்த நபர் மரணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை குருவிட்ட காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts