பிந்திய செய்திகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 164,898 ஆகவும், பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 82,571 ஆகவும் காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து 26,597 பேர் வந்துள்ளனர், அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து 22,304 பேர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து 16,638 பேர் வந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் உக்ரைனிலிருந்து 12,979 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இது நான்காவது அதிகம் சுற்றுலா பயணிகள் வந்த நாடாக மாறியது.

இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 165,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts