பிந்திய செய்திகள்

இனந்தெரியாத நபர் சடலமாக கிளிநொச்சியில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு பகுதியில்
கரடிப்போக்கு சந்தியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 5 மீட்டர் தொலைவில் கால்வாயல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு விபத்து ஒன்றினால் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதற்கான தடயங்கள் வீதியில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் ஆணொருவரின் சடலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts