பிந்திய செய்திகள்

முல்லையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு கண்டுபிடிப்பு

நேற்று (28) முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட யுத்தகாலத்து படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த படகு இனங்காணப்பட்டது.

சாலைப்பகுதியில் வாடி அமைத்து தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் நிலத்தில் புதைந்த படகினை மீட்டு இரண்டாக வெட்டியபோது படகிற்குள் வெடிபொருட்கள்பொருத்தப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, குறித்த பகுதிக்கு சென்ற படையினர் படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் படகினை மீட்டுள்ளார்கள்.

படகில் பொருத்தப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தகர்த்து அழிக்கப்படவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts