பிந்திய செய்திகள்

நாளை புதன்கிழமை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பு விபரங்கள் உள்ளே !

நாளை புதன்கிழமை நாடளாவிய ரீதியில் காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களும் 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, E வலயத்துக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும் F வலயத்துக்கு பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை E வலயத்துக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை F வலயத்துக்கும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டும், P,Q,R,S வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை T,U,V,W வலயங்களுக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை P,Q,R,S வலயங்களுக்கும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts