பிந்திய செய்திகள்

காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெட்டிகள் -உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

மன்னார் இராணுவ புலனாய்வாளர் களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன் இன்று அதிகாலை நடுக்குடா காட்டுப்பகுதியில் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Gallery

இதன் போது ஒரு தொகுதி மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது. சோதனையின் போது மாத்திரைகள் உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் என தெரிய வந்துள்ளதோடு, இரு பெட்டிகளில் இருந்தும் 60 ஆயிரம் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

Gallery

மீட்கப்பட்ட மாத்திரைகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts