பிந்திய செய்திகள்

இலங்கை வந்தடைந்த மன்னார் மைந்தனின் உடல்

இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பூதவுடலை பெற்றுக் கொள்ள அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சடலப் பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்படும்.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும்.

எதிர் வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts