இளைஞர்களிடையே அதிகரித்த காது கேளாமை

உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யசத் வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.