பிந்திய செய்திகள்

நிதியமைச்சர் பசில் – விமல் வீரவன்ச கடும் சீற்றம்!

நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கமும் அரச தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை என கூறி, தனக்குதான் அனைத்தும் தெரியும் என்ற தான்தோன்றித்தனத்தில் இருந்து கொண்டு செயற்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும்

தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்ற நினைப்பில் மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தீர்மானங்களை எடுப்பதால், நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார்.

கறுப்புப் பண சந்தையை நிதியமைச்சர் முன்னிலைப்படுத்தி செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான தன்மை கிடையாது எனவும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்ற தொனிப்பொருளின் கீழ் , கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடி நிலைமையில் இருந்து எவ்வாறு மீட்பது என்பது தொடர்பிலான வேலைத்திட்டங்கள் அடங்கிய தேசிய கொள்கை பிரகடனம் நேற்று ( வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளில் 11 கட்சிகள் ஒன்றாக இணைந்து, பிரகடனத்தை வெளிட்டன. இதில், முன்னாள் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.

நிகழ்வில் , அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்ததுடன் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவும் இதில் பங்கேற்றிருந்தார் .

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts