பிந்திய செய்திகள்

21 வயது கடற்படை வீரர் உயிரிழப்பு

பூனேவ ஷிக்ஷா கடற்படைத் தளத்தில் பணியாற்றும் 21 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் புல் ​வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்த கூர்மையான பகுதி பட்டதில் உயிரிழந்துள்ளார்.

புல் வெட்டிக் கொண்டிருந்த உழவு இயந்திருத்திற்கு அருகாமையில் கடற்படை வீரர் சென்ற போது, இயந்திரத்தில் இருந்து கூர்மையான பகுதியொன்று கழன்று கடற்படை வீரரின் உடலில் பட்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த கடற்படை வீரர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts