பிந்திய செய்திகள்

ஐநாவில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது

மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான இன்றைய விவாதம் இறுதிநேர நிகழ்ச்சி நிரலாக பின்னகர்த்தப்பட்டதால் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தின் அடுத்தகட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வேளைக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கை மீதான விவாதம் இன்று மேலும் பின்னகர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெறுவதாக இருந்த இந்த விவாதம், உக்ரைன் மீதான விவாதம் காரணமாக இன்று ஜெனிவா நேரம் மாலை 4 .45 க்கு பின்னகர்த்தப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் நேரப்பற்றாக்குறை எழுந்ததால் இந்த நிகழ்ச்சி நிரல் மாலை 5. 20இற்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இறுதிநேரத்தில் இந்த விவாதம் எடுக்கப்பட்டதால் அதனை இன்று முழுமையாக நடத்த முடியவில்லை.

இலங்கைக்கான குழு இந்த வார இறுதியிலும் ஜெனிவாவில் தங்கவேண்டிய நிலை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts