பிந்திய செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் புதையல் தோண்டும் நடவடிக்கைகள்…

03.03.2022 நேற்று இரவு பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைது செய்துள்ளார்கள். மேலும்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

மாத்தறை மாவட்டத்தினை சேர்ந்த இருவர்,புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த ஒருவர் என நால்வரை கைதுசெய்துள்ள ஒட்டுசுட்டான் பொலீசார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் புதையல் தோண்டுவதற்காக வந்துள்ளதுடன் இவர்களிடம் மத்திரம் வெத்திலை பாக்கு,பழம் சாம்பிராணி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை,தண்ணிமுறிப்பு பகுதிகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts