பிந்திய செய்திகள்

இன்று சுகாதார அமைச்சினால் வெளியிடவுள்ள புதிய அறிவிப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவது குறித்து இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் வீட்டை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு முறை வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேர்மறை சோதனைக்குப் பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சராக பதவியேற்ற சிறிது காலத்திலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் காரணமாக கொவிட் நோயாளிகளால் அதிகபட்சமாக வைத்தியசாலைகள் ஆக்கிரமிக்கப்படவில்லை.

ஆயிரத்து 460 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதேவேளை, வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு முறையில் ஒருவர் மாத்திரம் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்” என்றார்.

சுகாதாரத் துறையினரின் தொழிற்சங்க நடவடிக்கையை 10 நாட்களுக்கு இடைநிறுத்துவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகளின் நீதியான மற்றும் நியாயமற்ற செயற்பாடுகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதோடு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts