பிந்திய செய்திகள்

அளவுக்கதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதையடுத்து, இரவு உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் அதிகளவிலான மாத்திரைகளை ஒரே தடவையில் உட்கொண்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது இரண்டு போதை மாத்திரைகளை உட்கொண்ட மற்றையவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts