பிந்திய செய்திகள்

பாலமொன்றிக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்

பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (04) கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பிங்கிரிய போவத்த கொலமுன ஓயா பாலத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் இலக்கத்தை ஆராய்ந்ததில் மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக 07.12.2021 அன்று பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி தெரியவந்துள்ளது.

பின்னர் மோட்டார் சைக்கிள் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மனித மண்டை ஓடு மற்றும் பல எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.பின்னர், குறித்த மோட்டார் சைக்கிள் காணாமல் போன தமது மகன் பயன்படுத்தியது என மனுதாரர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

காணாமல் போனவர் பிங்கிரிய, திசோகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.இந்த எலும்புகள் சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


நீதவான் விசாரணை இன்று (05) நடைபெறவுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts