பிந்திய செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன .

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாத கால விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளதுடன், வீதிகள் மற்றும் வளங்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சுப் பதவி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியலை விட்டு வெளிநாடு செல்லவுள்ளதாக ஏற்கனவே தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts