பிந்திய செய்திகள்

வீதி விபத்தில் உயிரிழந்த தந்தை, மகன் – கொதித்தெழுந்த மக்கள் செய்த செயல்!

இன்று காலை 9.00 மணியளவில் வவுனியா – மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது.

இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்

இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்

இவ் விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களவார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts