பிந்திய செய்திகள்

ஒட்டுசுட்டானில் வாள்வெட்டாக மாறிய காணிப்பிணக்கு!!

நேற்று முன்தினம் 05.03.2022 இரவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்ப உறவினர்கள் இருபகுதியினருக்கு இடையில் நீண்டகாலம் ஏற்பட்ட காணிப்பிணக்கு கைகலப்பாக மாறியள்ளது.

இதன்போது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இச்சம்பத்தினை தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட ஒட்டுசுட்டான் பொலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளார்கள்.

பொலீசாரின் தலையீட்டினால் பாரிய வாள்வெட்டு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் வாள்வெட்டிற்கு இலக்கான இரு பகுதியினை சேர்ந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலீசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts