பிந்திய செய்திகள்

ஓட்டமாவடியில் இதுவரை எத்தனை கொவிட் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன தெரியுமா?

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர்ப் பகுதியில் கொரோனா ஜனாஸா நல்லடக்கப்பணி ஒரு வருட பூர்த்தியாகியுள்ள நிலையில் விசேட ஒன்று கூடலும், விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதன்போது கொவிட் – 19 மையவாடிக்கருகில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைவாக கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை ஓட்டமாவடி மஜ்மாநகர் பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

இதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மாநகர் பகுதியில் பிரதேச சபை, சுகாதார திணைக்களத்தினர், இராணுவத்தினர் ஆகியோரினால் உடல்களை அடக்கம் செய்யும் பணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று வரைக்கும் இராணுவத்தினர், சுகாதாரத்தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி பிரதேச சபையினால் நல்லடக்கம் செய்வதற்கு விரும்புகின்ற அனைத்தின மக்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

05.03.2021 தொடக்கம் 05.03.2022 வரை கொவிட்-19 தொற்றினால் மரணித்த 3,634 நபர்களின் உடல்கள் இம்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைவாக நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தத்தமது பிரதேசங்களில் இன்றிலிருந்து. நல்லடக்கம் செய்யலாமென அனுமதி வழங்கப்பட்டதற்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கப்பணி முடிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அனுமதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, சுகாதார மற்றும் பாதுகாப்புத்தரப்பினருக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும் தெரிவிக்க பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts