பிந்திய செய்திகள்

நாளைய தினம் மின் வெட்டு இடம் பெறும் வலயங்கள்

நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பாக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கிறது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களுக்கும், ஐந்து மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts