பிந்திய செய்திகள்

திரவப்பால் காரணமாக குழம்பிய நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருள்களுக்கு தட்டுபாடு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக போதுமானளவு திரவப்பால் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உணவு விநியோகப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மில்கோ நிறுவனத்திடம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தபோதும் பால் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts