கட்டுத்துவக்கு வெடிப்பு-ஒருவர் உயிரிழப்பு

09.03.2022 இன்று முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை வேளை காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்சி உயிரிழந்துள்ளார்.

நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 அகவையுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளது
இவரது உடலம் மல்லாவி ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
பிரோத பிரசோதனை மற்றும் பொலீஸ் அறிக்கையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலீசார் கூறியுள்ளார்கள்.