பிந்திய செய்திகள்

இலங்கையில் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts