பிந்திய செய்திகள்

3மாத கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் தாயார்

தாய் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு அநுராதபுரம் – வன்னியங்குளம் பிரதேசத்தில் முயற்சி செய்துள்ளார்.

இதன்போது தாய் மட்டும் காப்பற்றப்பட்ட நிலையில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் அவரது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததை அவதானித்த பிரதேச மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஒருவயதும் 3 மாதங்களுமுடைய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts