நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது
சந்தையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்
தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள உணவின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சந்தையில் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள உணவுகளை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.













































