பிந்திய செய்திகள்

பாதுகாப்பற்ற மின்சார வேலி-பறிபோன உயிர்கள்

இன்று (12) மதியம் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு எனும் கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்ட பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக் (13 வயது) மற்றும் முஹம்மட் இப்றாஹிம் (13வயது) என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts