பிந்திய செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலையில் சீமெந்து மற்றும் இரும்புக் கம்பிகளின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலையில் சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த கம்பிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts