பிந்திய செய்திகள்

காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் கைது

நேற்று (12-03-2022) சனிக்கிழமை கொழும்பு – ஹொரணை பகுதியில் கொழும்பில் தனது காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஹொரணை பகுதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு, 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று தனது காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.

இதன்போது அந்த இளைஞரிடம் 20 ஜோடி தங்கக் காதணிகள் அடங்கிய நகைப்பெட்டியை கடையின் உரிமையாளர் காட்டிய போது திடீரென அதனை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

அந்த இளைஞரை அவதானித்த மற்றுமொரு இளைஞர் குழு அவரை துரத்திச்சென்று பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் எடுத்துச்சென்ற நகைப் பெட்டியில் 500,000 ரூபா பெறுமதியான 20 ஜோடி காதணிகள் இருந்துள்ளதுடன், அவற்றில் இரண்டு ஜோடி காதணிகள் காணாமல்போயுள்ளதாகவும், சந்தேகநபர் ஓடும் போது காதணிகள் விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, ராஜகிரியவில் இருக்கும் தனது காதலிக்கு பரிசாக காதணி ஒன்றை கொள்வனவு செய்ய கடைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts