பிந்திய செய்திகள்

ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மேழிவனத்தில் யானை வேலி அமைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற மேழிவனம் கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேழிவனம் கிராமத்தைச் சூழவுள்ள வனப்பகுதிகளுக்கு யானைவேலிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில்குறித்த கிராமத்திற்கான யானைவேலி அமைக்கும் பணிக்கான முன்னாயத்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த கிராமத்தை சூழ 3.5 கிலோ மீட்டர் வரையான பகுதிகளுக்கு முதற்கட்டமாக யானைகள் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னும் பல கிராமங்களில் நாள்தோறும் காட்டுயானைகளால் மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல கிராமங்களுக்கு யானைவேலிகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டிய தேவை காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts