பிந்திய செய்திகள்

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று எடுத்துள்ள திடீர் மாற்றம்

இன்று (14) நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வினவியபோது, ​​எதிர்வரும் காலத்தில் தனது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரரிடமிருந்து பெறப்பட்ட தனியார் வாகனம் ஒன்றை பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பணிகளில் இலுந்து விலகியுள்ளதாலும், அமைச்சரவைக் கூட்டங்களைப் புறக்கணிப்பதாலும் தொடர்ந்து வாகனங்கள் மற்றும் இதர வசதிகளைப் பெறுவது நெறிமுறைக்கு புறம்பானது என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts