பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற 2பெண் உறுப்பினர்களுக்கு கிடைத்த அதிஸ்ரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகிய இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னர் திலும் அமுனுகம போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் சமீபத்தில் போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்படி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts