பிந்திய செய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி-பொலிஸாரால் முற்றுகை

தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றைய தினம்

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts