பிந்திய செய்திகள்

குப்பையில் அரசியல் தேடும் நாமல்…

ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தென்னிலங்கையில் பாரிய போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை பெரும்பான்மையினத்தவரின் அமோக ஆதரவுடன் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷ சகோதர்கள் மீது சிங்கள மக்கள் தற்போது மிகவும் வெறுப்படைந்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றைய தினம் எதிரணியினரால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே கொழும்பில் நேற்றைய தினம் குப்பையில் அரசியல் தேடிய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்றைய தினம் எதிர்ப்பை வெளியிடும் வகையில் அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு எதிரணியினர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர், அந்தப் பகுதியில் வீசப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்ததைப் போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பகிரப்பட்டன.

இவ்வாறான செயற்பாடு ஒரு அரசியல் நாடகம் என சிங்கள மக்கள் தரப்பில் நேரடியாக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள நாமல் செய்யும் சிறுபிள்ளைத்தனமான செயல் இதுவென பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டு சில மணித்தியாலங்களில் அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் அந்தப் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தப் புகைப்படங்களை அமைச்சர் நாமல் தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிடாத நிலையில் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்த ராஜபக்ஷ குடும்பத்தின் புகழ், தற்போது படிப்படியாக குறைந்து வருவதை வெளிக்காட்டுவதாகவே மக்களின் தற்போதைய மனநிலை உள்ளமை சுட்டிக்காட்டப்படுகிறது.

#lka#GoHomeGota #WeAreWithGota pic.twitter.com/ExA5VBLkRu

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts