பிந்திய செய்திகள்

வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்புடைய சந்தேகத்தில் தந்தையும் மகனும் கைது

யாழில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வீட்டில் இருந்து வாள் மீட்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து , வீட்டின் உரிமையாளர் எனும் அடிப்படையில் , இளைஞனின் தந்தையாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts