பிந்திய செய்திகள்

இலங்கை மருத்துவ நிபுணர் ஒருவரால் வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பி கண்டுபிடிப்பு

இலங்கை விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாகதெரிவித்தார்

இரசாயனத்தை எதிர்க்கும் இந்த தொப்பியைப் பயன்படுத்துவதால், வைரஸ் சுவாசக் குழாயில் நுழைந்து, தலை, கழுத்து மற்றும் நெற்றியில் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை முன்னதாக, டெங்கைக் கட்டுப்படுத்த பப்பாளி இலைகளைப் பயன்படுத்தி மருந்து ஒன்றை அறிமுகப்படுத்திய விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே, மருத்துவத் துறையில் தனது சிறந்த கண்டுபிடிப்புக்காக 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts