பிந்திய செய்திகள்

முல்லைத்தீவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சமையல்எரிவாயு அடுப்புக்கள் ஆங்காங்கே வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் எரிவாயு அடுப்புஒன்று இன்று (17) காலை வெடித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: எரிவாயு அடுப்பினை பயன்படுத்தும் குடும்பம் ஒன்று வழமை போன்று சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

குறித்த சம்பவம்தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதற்கமைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் எரிவாயு வழங்கும் முகவரிடமும் இது தொடர்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பம் கூறியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts