இன்று (17.03.2022) மாலை வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா கூறியுள்ளார்.
பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் (வயது – 60) என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தனது அறையில் உறங்கியவர் மீண்டும் எழும்பாத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் எழுப்பியபோது எந்தவித சத்தமும்வராத நிலையில் கதவை உடைத்தபோது அவர் மரணமடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அகீல் அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் இவரது மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













































