பிந்திய செய்திகள்

இரண்டு பேருந்துகள் மோதியதில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் காயம்!

பசறை – நமுனுகுல வீதியில் 10ஆம் கட்டை பகுதியில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரதிகளின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts